நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அனல் மின் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரியின் கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில், மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி, அதன் விநியோகம், இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்டின் மொத்த மின் தேவை அதிகரித்துள்ளது.