அண்மைகாலமாக உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமாக கருத முடியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த கவுன்சிலின் கூடுதல் இயக்குநரான சமிரன், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், சில மாவட்டங்களில் மட்டும் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சீராக பரவவில்லை என்பதால் அதனை புதிய அலையாக கருத முடியாது என்றும் சமிரன் குறிப்பிட்டுள்ளார்.