புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விவேகானந்தா நகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 12-ம் தேதி அன்று வந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்கில் பான் எண்ணை இணைப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.
உடனே அவரும் அந்த லிங்கிற்கு சென்று பார்வையிட்ட போது, ஓடிபி ஒன்று வந்துள்ளது. அதனை அவர் அந்த லிங்கில் சென்று செலுத்திய பிறகு வங்கி கணக்கில் இருந்த பணம் குறையத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தபோது, ஒரு லட்சத்து 3ஆயிரத்து 500ரூபாய் திருடப்பட்டு இருந்தது.