ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை, அந்த பெண் கட்டையால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் நேற்றிரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன், அவரது வாகனத்தை இடைமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.