மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை புதிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் வெளியிட வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வதில் கவனக்குறைவாக செயல்படும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு, பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, ஓலா, ஒகினவா (Okinawa), பியூர் ஈ.வி (Pure EV) உள்ளிட்ட நிறுவனங்கள் 7,000 க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற்றன.
அந்நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படும் வரை, புதிய மாடல்களை வெளியிட வேண்டாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏதேனும் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தால், அந்த பாட்சில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் திரும்ப பெறுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.