மத்தியப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்த டீசலை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.
பன்னா பகுதியில் உள்ள மலைப்பாதையில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பிரேக் பழுதாகி நின்றது. அப்போது அதில் இருந்த டீசல் கசிந்ததாகத் தகவல் பரவியதைக் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடம், வாளி மற்றும் கேன்களில் டீசலை திருடிச் சென்றனர்.
ஒருலிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால், முடிந்தவரை அள்ளிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு திரண்ட மக்கள் சில நிமிடங்களிலேயே டேங்கர் முழுவதையும் காலி செய்தனர்.