புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால், கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகை நாட்கள் குறைவாக இருந்தாலும், பள்ளிக்கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.