மத்திய அரசின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார பேருந்துகளுக்கான டென்டரை டாடா நிறுவனம் கைப்பற்றியது.
புதுடெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதரபாத், சூரத் ஆகிய 5 நகரங்களில், 12 மீட்டர் ஏசி மற்றும் நான்-ஏசி தாழ்தள மின்சார பேருந்துகள், 9 மீட்டர் ஏசி மற்றும் நான்-ஏசி மின்சார பேருந்துகள், 12 மீட்டர் சாதரண மின்சாரப் பேருந்து என 5 பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 450 மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
இதில் டாடா மோட்டர்ஸ், அஷோக் லெய்லாண்ட், வால்வோ எய்ச்சர் உள்ளிட்ட கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
டாடா நிறுவன மின்சார பேருந்துகளை, ஒரு கிலோமீட்டர் தூரம் இயக்க செலவாகும் தொகை, போட்டி நிறுவனத்தை விட 10 ரூபாய் குறைவாக இருந்ததால் டாடா நிறுவனத்திற்கு இந்த டென்டர் வழங்கப்பட்டது.