இந்திய ரயில்வே முதன்முறையாக இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகங்களைப் பொருத்திச் சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிச் சாதனை படைத்துள்ளது.
டெல்லி - மும்பை இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கென 1504 கிலோமீட்டர் தொலைவுக்குத் தனி ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் அரியானாவின் அடலி முதல் குஜராத்தின் பலன்பூர் வரை பணி முடிக்கப்பட்ட ரயில் பாதையில் இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகம் பொருத்திய சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியுள்ளனர்.