தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சொத்து வாங்கியதில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை பதிந்த வழக்கில் பிப்ரவரி 23ஆம் நாள் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். மார்ச் 15 அன்று அவரின் ஜாமீன் கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறிவிட்டது.
இந்நிலையில் ஜாமீன் கோரித் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் தலையிட முடியாது என்றும், ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படியும் கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.