பேட்டரிகள் தீப்பற்றிய சம்பவங்களை அடுத்து 2000 இ -ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக பியூர் இ.வி நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் பியூர் இ.வி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வீட்டில் சார்ஜ் போடப்பட்டபோது திடீரென வெடித்து தீப்பற்றியதில் 80 வயதான ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பியூர் இ.வி நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போன்று சென்னை மாத்தூரிலும் அதே நிறுவன ஸ்கூட்டர் தீப்பற்றியது.
இதையடுத்து இ டிரன்ஸ் பிளஸ் மற்றும் இ புளூட்டோ 7 ஜி ரகத்தை சேர்ந்த 2 ஆயிரம் ஸ்கூட்டர்களை திரும்ப பெறப்படுவதாக பியூர் இ.வி நிறுவனம் அறிவித்துள்ளது.
பேட்டரியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்று இலவசமாக ஆய்வு செய்யப்படும் என்றும், டீலர்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒகினாவா நிறுவனமும் 3212 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது.