கேரளத்தில் அதிவிரைவு ரயில்பாதைத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே 532 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிவிரைவு ரயில்பாதை அமைக்க கேரள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
பெருமளவில் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்தும் மிதித்தும் தாக்கிக் கொண்டனர்.