இந்தியப் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சி விகிதம், உலகுக்கு நற்செய்தி எனப் பன்னாட்டுப் பண நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பன்னாட்டுப் பணநிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என்றும், இது பிற நாடுகளைக் காட்டிலும் விரைவான வளர்ச்சி விகிதம் என்றும் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தார்.