தலைநகர் டெல்லியில் இன்று புழுதிக்காற்று வீசும் என்றும், நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியதாகவும், நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 42 புள்ளி 6 டிகிரி செல்சியசாக பதிவானதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏழு நாட்களாக கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெப்ப நிலையை எட்டிய டெல்லி மக்களுக்கு லேசான அல்லது மிதமான மழையால் சற்று ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.