டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நான்காவது அலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.3
திங்கட்கிழமையன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஐநூறை தாண்டியிருக்கும் நிலையில், மொத்தமாக கொரோனா பாதித்தோரின் விகிதமும் 7.72சதவீதமாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரையில் 18லட்சத்து 69ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26ஆயிரத்து160 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழையன்று 325 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் கணிசமாக உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அண்டை மாநிலங்களின் சில மாவட்டங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.