எல் -ரூட் சர்வர் நிறுவியதன் மூலம் தடை மற்றும் இடையூறு இல்லா அதிவேக இணைய சேவை வசதியை கொண்ட நாட்டின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாறியது.
நாட்டில் டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரங்களில் ஜே-ரூட் சர்வர்களும், மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் எல்-ரூட் நவீன சர்வர்களும் நிறுவப்பட்டு நவீன இணைய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நாட்டில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி இணைய சேவைகள் வழங்கும் எல்-ரூட் சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்காக சொந்தமான டொமைனை மாநில அரசு உருவாக்கி உள்ளது.
மேலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்கு தடையில்லா இணைய சேவை கிடைக்கும் என்றும் அதன் மூலம் மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் காணும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.