இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்தும் வகையில் லடாக் அருகே ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 3 செல்போன் டவர்களை சீனா அமைத்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 4ஜி வசதி கொண்ட செல்போன் டவர்களை சீனா அமைத்துள்ளதாகவும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் 2ஜி சேவை கிடைப்பதாகவும் இந்திய எல்லையருகே உள்ள சூசுல் தன்னாட்சி மலைக் கட்டுப்பாட்டு பகுதியின் பிரதிநிதி Konchok Stanzin தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் பாங்காங் ஏரி பகுதியில் பாலம் கட்டிய சீனா, தற்போது செல்போன் கோபுரங்கள் அமைத்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறும் வகையில் செல்போன் கோபுரங்களை சீனா எழுப்பியதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.