குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம் மாநிலத்தில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று மாலை காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, இன்று பனஸ்கந்தா மாவட்டம் தியோதரில் உள்ள பனஸ் பால் பண்ணை வளாகத்தை பிரதமர் பார்வையிடுகிறார். அத்துடன் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
இன்று பிற்பகல் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையடுத்து, காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், டாஹோத்தில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.