இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு, பல வாரங்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சையில் இருந்து வந்த 214 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நாளில் ஆயிரத்து 985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 542 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.