லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் காரைவிட்டு மோதவிட்டு கொலைசெய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலஹாபாத் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது.
இதனை எதிர்த்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் நிலைமையை சரியாக கவனிக்காமல் ஜாமீன் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அடுத்த ஒருவாரத்திற்குள் சிறைக்கு செல்ல ஆசிஷ் மிஸ்ரா சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.