மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தின் போது, பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனை கூட்டம், உலக வங்கியின் உயர் நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.
மேலும், இந்தோனேசியா, தென் கொரியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.