பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
சிஎன்ஜி க்கு மானியம் வழங்கக் கோரி டெல்லி முதலமைச்சருக்கு கடந்த வாரத்தில் கடிதம் எழுதியதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தெரிவித்தது.
ஆனால் அரசு பதில் அளிக்காததால் இரண்டு நாள் போராட்டம் நடத்தியதாகவும் இப்போது இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பதாகவும் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கூறியுள்ளது.
இதனால் தலைநகரில் இன்று பெரும்பாலான ஆட்டோக்களும் டாக்சிகளும் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ ,மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களிலும் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும் டெல்லிக்கு ஆதரவாக இன்று வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்