எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு மற்றும் சித்திரை முழு நிலவையொட்டி புதுவை ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.