நாட்டின் வளர்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் இது குறித்து பதிவிட்ட பிரதமர், அமைப்புசாரா தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இ-ஷ்ரம் என்ற இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ததன் மூலம், அவர்களுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.