செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்துச் செயல்பாடு - பிரதமர் மோடி

Apr 15, 2022 02:33:02 PM

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட இலக்கு வைத்துள்ளதால், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் புச் நகரில் பட்டேல் சமுதாய சங்கத்தால் கட்டப்பட்டுள்ள 200 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2001ஆம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியின் தலைவிதி, உயர் சிறப்பு மருத்துவமனையால் மாற்றி எழுதப்படுவதாகத் தெரிவித்தார்.

200 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனை குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் 1100 மருத்துவப் படிப்பு இடங்களும் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தார். இன்று 36 மருத்துவக் கல்லூரிகளும் ஆறாயிரம் மருத்துவப் படிப்பு இடங்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்துள்ளதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சிறந்த மருத்துவ வசதி நோய்க்கான சிகிச்சை மட்டுமல்லாமல் சமூக நீதி மேம்பாட்டின் அடையாளமும் ஆகும் எனத் தெரிவித்தார். ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்கும்போது அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படுவதாகத் தெரிவித்தார்.


Advertisement
திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் படங்களை பதிவு செய்தது எப்படி..? பகீர் வாக்குமூலம் அளித்த கைதான "தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள்
நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைக்க மத்திய அரசு திட்டம்
அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.. மருத்துவமனைக்கு திரண்டன அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள்..
பெங்களூரு ரிசர்வ் வங்கியில் போலி 2,000 ரூபாய் தாள்களை மாற்ற முயன்ற 5 பேர் கைது
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா
தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா
சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86
2028 வரை இலவசமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement