ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவுநாளில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், தியாகிகளின் துணிவும் தியாகமும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஆங்கில அரசின் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்தப் படுகொலையின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர்களின் துணிச்சலும் தியாகமும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நினைவிடத் திறப்பு விழாவில் தான் பேசிய பேச்சையும் இணைத்துள்ளார்.