எகிப்தில் இருந்து அழைத்து வரப்பட்ட நீரவ் மோடியின் உதவியாளர் சுபாஷ் சங்கர், மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, நீரவ் மோடி அவரது நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், எகிப்தின் கெய்ரோ நகரில் சுபாஷ் சங்கரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை மும்பை அழைத்து வந்தனர். பின்னர், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுபாஷ் சங்கரை ஆஜர்படுத்தினர்.
அப்போது, சுபாஷ் சங்கரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது.