ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மொகியுதின் ஹவுரங்கசிப் அலம்கிரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியது, பயங்காரவாத தாகுதல்களுக்கு உதவியது, சட்டவிரோத குழுக்களுக்கு நிதி திரட்டியது, தீவிரவாத ஊடுருவலுக்கு உதவியது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மொகியுதின் ஹவுரங்கசிப் அலம்கிரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.