டெல்லியில் இ-சைக்கிள் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுமென அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இ - சைக்கிள் வாங்கும் முதல் பத்தாயிரம் பேருக்கு 5 ஆயிரத்து 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் ஆயிரம் பேருக்கு கூடுதல் மானியமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வர்த்தக பயன்பாட்டிற்கான சரக்கு இ - சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மானியம் முன்பு தனிப்பட்ட முறையில் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது, நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.