ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவ 24 மணி நேர டிஜிட்டல் சேவைகளை வழங்க உள்ளன.
தற்போதுள்ள வங்கிகள் டிஜிட்டல் பேங்கிங் சேவைகளைத் தொடங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் வங்கிக் கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்வது, பணத்தை எடுப்பது, வாடிக்கையாளர் சுயவிவரங்களை திருத்துவது , கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல், புகார்கள் அளித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறை மூலமாக 24 மணி நேரமும் பெற முடியும்.இதன் மூலமாக வங்கிகளுக்கான செலவினங்களும் குறையும்.