ஆங்கிலத்திற்கு மாற்றாகவே இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் 37-வது நாடாளுமன்ற அலுவல் மொழிகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், மாநில மொழிகளின் சொற்களுடன் இந்தியை வளப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அலுவல் மொழியான இந்தியை நாட்டு ஒருமைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது உள்நாட்டு பொது மொழிகளில் தான் பேச வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத கோப்புகள் இந்தியில் தான் தயாராகி வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார். பத்தாம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்க வட கிழக்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.