மக்கள் நலப் பணி மற்றும் தொண்டு செய்யுமாறு பாஜக எம்பிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவின் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் எம்பிக்கள் மத்திய அரசின் குழாய் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், சுகாதாரம் தொடர்பான ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் உள்ளிட்ட 14 முக்கியத் திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யுமாறு எம்பிக்களிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி ஏப்ரல் 7 முதல் 15 நாட்களுக்கு நடைபெறும் சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்கவும் கேட்டுக் கொண்டார்.
பாஜகவின் வெற்றிக்கு இத்திட்டங்களே முக்கியக் காரணமாக விளங்குவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.