இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 5 சதவீதம் சரிந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மார்ச்சில் அந்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 71 ஆயிரமாக குறைந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
செமிகண்டக்டர்கள் கிடைப்பது இன்னும் சவாலாக உள்ளதால், வாகனங்களுக்கான அதிக தேவை மற்றும் அதனை பெறுவதற்கான காத்திருப்பு காலங்கள் தொடர்ந்து நிலவுவதாக கூட்டமைப்பின் தலைவரான வின்கேஷ் குலாட்டி கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனாவால் சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது விநியோகத்தை மேலும் குறைத்ததால், வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.