ஆந்திர மாநிலத்தில் திருப்பதியை மாவட்ட தலைநகராக கொண்ட ஸ்ரீ பாலாஜி மாவட்டம் உட்பட மேலும் 13 மாவட்டங்கள் புதிதாக இன்று உதயம் ஆகின்றன.
ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தற்போது ஆந்திராவில் இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையினை 13 ல் இருந்து 26 ஆக உயர்த்த முடிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன.
அதில் ஸ்ரீபாலாஜி மாவட்டம் திருப்பதியை மாவட்ட தலைநகராகக் கொண்டும், என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவை மாவட்ட தலைமையிடமாக கொண்டும் அமைகிறது.
பாலாஜி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கட்ரமணா ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பரமேஸ்வர ரெட்டி ஆகியோர் இன்று பொறுப்பேற்கின்றனர்.