மகாராஷ்டிரத்தின் நாசிக் அருகே மும்பை - ஜெய்நகர் விரைவு ரயிலின் பத்துப் பெட்டிகள் தடம்புரண்டதில் பயணிகள் பலர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை குர்லாவில் இருந்து பீகாரின் ஜெய்நகருக்குச் செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 3:10 மணியளவில் நாசிக் அருகே லகாவத் - தேவ்லாலி நிலையங்கள் இடையே சென்றபோது ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தைவிட்டுக் கீழிறங்கின.
இதில் பயணிகள் பலர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அங்கு மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கான ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தடம்புரண்ட பாதையில் செல்ல வேண்டிய சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.