டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை எதிர்க்கட்சி தலைவர்களின் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த அலுவலகத்தில் நூலகங்கள், கூட்டங்களுக்கான அரங்கு உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அலுவலகத்தை திறந்துவைத்த முதலமைச்சர், நுழைவு வாயிலில் நிறுவப்பட்ட பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது மார்பளவு சிலைகளையும் திறந்தார்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஎம் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.