வட மாநிலங்களில் சைத்ர நவராத்ரி விழா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது.
சக்தி பீடங்களில் 9 நாட்களுக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா களை கட்டியுள்ளது.
மலை மகள், கலைமகள், திருமகள் என முப்பெரும் தேவியருக்கு இந்த நாட்களில் ஆராதனை போன்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
நவராத்திரியின் முடிவில் ஏப்ரல் 10 ஆம் தேதி திருமால் ராமனாக அவதரித்த நாள் ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.