செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

நன்றாகப் படித்தால் அச்சமின்றித் தேர்வெழுதலாம் - பிரதமர் மோடி

Apr 01, 2022 07:11:55 PM

நேரடி வகுப்பில் கற்பதே இணைய வழியிலும் உள்ளதால் கற்றலுக்கான வழிமுறை ஒரு தடையில்லை என்றும், கருத்தூன்றிப் படித்தால் அச்சமின்றித் தேர்வெழுதலாம் என்றும் பிரதமர் மோடி.

தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும், தேர்வு பற்றிய விவாதம் என்னும் நிகழ்ச்சி டெல்லி தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்வுகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் எனத் தெரிவித்தார்.

அஞ்சாமல் பிறரைப் பார்க்காமல் தான் படித்ததைக் கொண்டு நம்பிக்கையுடன் தேர்வெழுத வேண்டும் எனத் தெரிவித்தார்.
இணையவழியில் படிக்கும் மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் நேரத்தைப் போக்காமல் படிப்பிலேயே அக்கறை காட்ட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர், பெற்றோரின் நெருக்குதல் இல்லாத மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். பெற்றோர் தம் கனவுகளைப் பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என்றும், எதிர்காலம் பற்றிய தீர்மானத்தை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் திறமைகளைப் பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகள் பல திறன்களைப் பெற்றுள்ளதாகவும், அவர்கள் பலவீனங்களைப் பலமாக மாற்றிக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிப் பிரதமர் வாழ்த்தினார்.

தேர்வுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியில் அரங்குக்கு வந்திருந்த மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கே சென்று பிரதமர் மோடி பார்த்தார். அவர்களிடம் பேசியதுடன் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.


Advertisement
வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்..!!
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம்
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
குரங்கம்மை நோய் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுரை
கேரள மாநிலம் திருச்சூரில் 3 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளை என தகவல்
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு
பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து..
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று காரை வழிமறித்து நகை வியாபாரியை கடத்திய கும்பல்
பெங்களூர் பெண்ணைக் கொன்ற நபர் ஒடிசாவில் தூக்கிட்டுத் தற்கொலை

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement