மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. அதில், ஏப்ரல் 1 முதல் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடி பட்வா, ரம்ஜான் உள்ளிட்ட விழாக்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி வழக்கம்போல் கொண்டாட அனுமதிக்கப்படும். இதேபோல் பொது இடங்களுக்குச் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும், மக்கள் விரும்பினால் அணியலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.