அசாமில் கடந்த 4 ஆண்டுகளில் 200 காண்டாமிருகங்கள் அதிகரித்துள்ளன.
அங்குள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் கடந்த 2018ம் ஆண்டு 2 ஆயிரத்து 413 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது என காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் ஜதீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அசாமில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.