உத்தரபிரதேசத்தில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
முதல்வராக 2ஆம் முறையாக பதவியேற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையில், லக்னோவில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்த இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில் அது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பேசிய யோகி ஆதித்யநாத், இலவச ரேசன் திட்டம் நீட்டிக்கப்படுவதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.