உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் 2ஆவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பா.ஜ.க. கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யோகி ஆதித்யநாத்திற்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து, கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற உள்ள நிலையில் 16 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.