உத்தரப் பிரதேச முதலமைச்சராக இன்று மாலை 4 மணிக்கு யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக நேற்று அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் யோகி இரண்டாவது முறை முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
லக்னோவில் நேற்றிரவு ஆளுநரை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்களிடம் பேசிய யோகி, பிரதமர் மோடியின் வழிகாட்டலில் கடந்த 5 ஆண்டுகளாக தமது அரசு செய்த நலப்பணிகளுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறினார்