சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ இன்று பகல் 11 மணிக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
காபூல் மற்றும் பாகிஸ்தானில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்ட பின் அவர் டெல்லி வந்துள்ளார். இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் வெடித்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அமைச்சர் ஒருவர் இந்தியா வந்திருப்பது முதன்முறையாகும்.
எல்லையில் படைகளைக் குறைத்த சீனாவிடம் இந்தியா படைக்குறைப்பு குறித்து தொடர்ந்து ராணுவத் தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் காஷ்மீர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட வாங் யீக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.