தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
போயிகூடாவில் அமைந்துள்ள அந்த கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நள்ளிரவில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஐதராபாத் மத்திய மண்டல காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த அனைவருமே பீகார் மாநிலத்தில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.