உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்கிறார்.
ஆளுநர் குருமித் சிங் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் தனி மாநிலமாக 2000 ஆம் ஆண்டில் உருவானது. இதுவரை 5 முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதில் 4 முறை பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஆனால் 13 முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த தாமி, அடுத்த 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.