செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு… இராணுவத்திலும் இடம் உண்டு : நம்பிக்கையுடன் ஓடு ராஜா... பையன பாருங்க பைக்கர்ஸ்

Mar 21, 2022 10:17:31 PM

பெற்றோர் வாங்கிக் கொடுத்த 2 லட்ச ரூபாய்க்கு பைக்கை வீலிங் செய்து போலீசிடம் பறி கொடுக்கும் ஊதாரி இளைஞர்கள் மத்தியில், குடும்பத்தின் வறுமையான சூழலிலும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை பார்த்துக் கொண்டே தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி பயிற்சி செய்யும் 19 வயது சிறுவனின் விடா முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பெற்றோர் சம்பாத்தியத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து அதிவேக பைக்குகளை அடம் பிடித்து வாங்கும் இளசுகள் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது.

பைக்கில் இரு சக்கரங்கள் இருக்க கெத்துக்காட்டுவதாக நினைத்து ஒற்றை வீலில் பைக்கை ஓட்டி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை கடற்கரை சாலையில் பைக்கில் வித்தை காட்டி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கியதால், 3 பேரும் தங்களது விலை உயர்ந்த பைக்குகளை போலீசாரிடம் பறிகொடுத்துள்ளனர்

பத்து காசுக்கு பிரயோசனமில்லாத செயல்களை செய்யும் இத்தகைய ஊதாரி இளைஞர்களுக்கு மத்தியில் உத்ரகாண்ட் மாநிலம், அல்மோராவை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெக்ரா என்பவர் வறுமையான குடும்ப சூழ் நிலையிலும் வேலைபார்த்துக் கொண்டே , தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி உடலை வலுவாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தாய் மருத்துவமனையில் இருக்க சகோதரருடன் தங்கி தனியார் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் பிரதீப் மெக்ரா இரவு நேரத்தில் சாலையில் தனியாக ஓடுவதை பார்த்த பாலிவுட் இயக்குனர் வினோத் காப்ரி அவருக்கு காரில் லிப்ட் கொடுக்க முன்வந்துள்ளார்.

அதற்கு பிரதீப் மெக்ராவோ, ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தனது லட்சியம் என்றும் அதற்காக பயிற்சி எடுப்பதாக கூறியதோடு, தனக்கு இப்போது தான் ஓடுவதற்கு நேரம் கிடைத்துள்ளதாகவும் பொறுப்புடன் பதில் சொல்லியவாறே ஓடிக் கொண்டிருந்தார்.

இன்று ஒரு நாள் என்னுடன் வந்து டின்னர் சாப்பிடு என்று இயக்குனர் வினோத் காப்ரி அழைத்த போதும் வர மறுத்ததோடு , காலையில் வேலைக்கு புறப்படுவதற்கு முன்பாக சமைக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இப்போது ஓடுவதாக கூறியதோடு உங்களுடன் காரில் வந்தால் என்னுடைய பயிற்சி பாதிக்கப்படும், தனக்காக தனது சகோதரர் அறையில் காத்துக் கொண்டிருப்பார் என்று கூறியவாறு ஓடிக் கொண்டே இருந்தார்

இந்த வீடியோவை காரில் இருந்த படியே பதிவு செய்த இயக்குனர் வினோத் காப்ரி உன்னுடைய வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் இந்த வீடியோ வைரலாகும் தெரியுமா என்று கூறிய போது கூட என்னை எல்லாம் யாருக்கு தெரிய போகிறது என்று கூறியவாறு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்று ஓடிக் கொண்டே இருந்தார்.

சுத்தமான தங்கம் என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை இயக்குனர் வினோத் காப்ரி பகிர்ந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இளைஞர் பிரதீப் மெக்ராவை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

கனவு காணுங்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற அப்துல்கலாமின் தன்னம்பிக்கை வரிகளுக்கு உயிரூட்டும் பிரதீப் மெக்ராவுக்கு சமூக வலைதங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


Advertisement
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Advertisement
Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..


Advertisement