மின்சார வாகனம் மற்றும் பேட்டரி தயாரிப்புக்காக இந்தியாவில் 2026-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரத்து 445 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குஜராத்தில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும், மேலும் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சுசுகி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.