ஆந்திராவின் திருப்பதி மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வர ரெட்டி, சுஜாதா தம்பதியினர், திருப்பதி சோதனை சாவடியில் இருந்து திருப்பதிக்கு இரண்டாவது மலைப்பாதை வழியாக காரில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது, காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வருவதை அறிந்த இருவரும், காரில் இருந்து வெளியேறிய நிலையில், புகை அதிகரித்து காரின் முன்பக்கம் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் சேதமடைந்த நிலையில், இந்த விபத்தால் திருப்பதி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.