லடாக்கில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்றிரவு 9.40 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்றிரவு 7.05 மணிக்கு லாடாக்கில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிறகு மீண்டும், லடாக்கின் கார்கில் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.